Skip to content
ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ...?

ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ...?

76
982
EBOOK
Completed#Meera krish#Orphanage heroine story#Romantic love story#Terror hero story#Heroine one side love story#Romantic novel#Tamil novel#Meera
Meera krish
Meera krish

About

அவள் உள்ளே நுழைந்ததும் சாளரத்தின் வழியே வானத்தை பார்த்தபடி இருந்தவன் திரும்பினான். கனி திரும்பி கதவை தாழ் போட்டவள் அதன் மீதே சாய்ந்து நின்று தலை சாய்த்து அவனை நோக்க, அந்த பார்வையிலே தொலைந்து போனவன், “என்ன?” என்று சிரிப்புடன் புருவத்தை உயர்த்த, “பார்த்தீபா…” என்று குரலில் மொத்த காதலை சேர்த்து அழைத்தவள் கையை அவனை நோக்கி விரிக்க, அதில் முழுவதுமாக தடுமாறியவன், “என்னடி?” என்று சிரிப்பும் முறைப்புமாக வினவ, “எடுத்துக்கோ…” என்று காற்றுக்கும் கேட்காத குரலில் மொழிய, “ஹான்” என்றவன் கேட்காத பாவனையில

ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ

ஜென்மம் 1

“கனிம்மா இன்னும் எதாவது செய்யணுமா?” என்ற கவிதாவின் குரலில் நடப்புக்கு வந்தவள்,

“போதும் கா. எனக்கு ஒத்தாசையா வந்திங்கன்னா வீட்டை கழுவிவிட்றலாம்” என்று பதில் மொழிய,

“ஹ்ம்ம் பக்கெட்டையும் மாப்பையும் எடுத்துட்டு வர்றேன் மா” என்று கவிதா நகர விழைய,

“நான் அதை எடுத்துட்டு போறேன். ரெண்டு பேரு மட்டும் கழுவினா நேரமாகிடும். நீங்க செண்பகத்தையும் அழைச்சிட்டு வாங்கக்கா” என்றாள்.

கவிதா, ‘சரியென’ நகர,

கனி கையில் வாளியுடன் வெளியே வர அங்கே வராண்டாவில் குழுமியிருந்தது மொத்த குடும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap