
துணையாய்... மகளாய்... உறவாய்
32
0
SERIES•
Ongoing
About
தன் தந்தைக்காக இன்னொரு வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடுகிறாள் ராஜவேலுவின் மகள் நந்தினி. தனக்காகவே அவருடைய இருபத்தி இரண்டு வருட வாழ்க்கையை அர்ப்பணித்த தந்தைக்கு இனியாவது ஒரு துணையுடன் வாழ வேண்டும் என அவருடன் போராடி, மன்றாடி தன் தந்தைக்கு ஒரு வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுக்கிறாள். தென்றல் காற்றாய் போய் கொண்டிருந்த ராஜவேலுவின் கல்யாண வாழ்க்கை புயலாய் மாறி, கொட்டும் மழையில் கட்டின மனைவியை வீட்டை விட்டு துரத்துகிறார். தவறு செய்தவள் அவள் என வெறுக்கிறார். அப்படி என்ன தவறு செய்தார் ராஜவேலுவின் மனைவி?
உறவு 1 கதிரவன் உதித்து பல மணி நேரங்கள் கடந்தும் கூட இன்னும் எழாமல் படுக்கையில் போர்வைக்குள் தன்னை சுருக்கி கொண்டு, சூரியன் தன் கதிர் வீச்சுக்களை முகத்தில் அடிப்பதை உணர்ந்த பருவ வயது வந்த தேவதையோ, மீண்டும் போர்வைக்குள் தன்னை முழுதாக மறைத்து கொண்டாள். அவள் நந்தினி அழகின் சிகரம் என்று சொல்லும் அளவுக்கு அழகிதான். இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்பு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது தொடங்கி உள்ளது. வட்டமான முகம், எடுப்பான மூக்கு, பெரிய கோலி குண்டு கண்கள், அழகான அதரங்கள் அங்க லாவண்யங்கள் அனைத்தும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap