
நெஞ்சை கொள்ளையிட்ட முரடனே
50
381
SERIES•
Completed
About
முரட்டுத்தனமான கிராமத்து நாயகன் மருது பாண்டி மற்றும் அவனை அறவே வெறுக்கும் நாயகி தேன்மொழி... இருவரும் எதிர்பாரா விதமாக திருமண பந்தத்தில் இணைகின்றனர்... நாயகி நாயகனின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சேர்ந்து வாழ்வாளா அல்லது பிரிந்து செல்வாளா என்பதே கதை...
வானம் முழுக்க கருப்பு மேகங்கள். அவ்வப்போது வெட்டும் மின்னல் மட்டும் சில நொடிகள் அந்த கிராமத்து பாதையை வெளிச்சமாக்கி மறைந்து போனது... நீண்ட நேரமாக பெய்த கனமழை சற்று முன்னர் தான் ஓய்ந்து போக இப்போது தூரல் மட்டுமே தூரிக் கொண்டிருந்தது... நேரம் இரவு பன்னிரண்டெ நெருங்க தேன்மொழி தன் ஸ்கூட்டியை வேகமாக ஓட்டியவாறு அந்த இருட்டான காட்டு பாதையில் வேகமாக வந்து கொண்டிருந்தாள்.... தாவணி மழையில் நனைந்து தோளோடு ஒட்டியிருக்க குளிர்காற்று முகத்தில் அடித்தாலும், அவள் வேகத்தை குறைக்கவில்லை... அவள் மனது முழுக்க ஓரே...
Loading...
Enjoyed this?
Sign in to clap