Skip to content
கொடிய சாத்தானே

கொடிய சாத்தானே

21
6
SERIES
Ongoing

About

காமினி நம் கதையின் நாயகி. கஜன் நம் கதையின் நாயகன். காமினி தன் தந்தையை மரணத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காக மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த காட்டான் குளம் கிராமத்திற்கு போகிறாள். அங்கு அவளுக்கு நடக்கும் மர்மமும் அமானுஷ்யமும் அவளை விடாமல் துரத்துகிறது. அங்கிருந்து தப்பித்து போக நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை? அந்த காட்டான் குளம் கிராமத்தை விட்டும் அந்த பெரிய அரண்மனை விட்டும் அவள் தப்பித்து போவாளா? இல்லை அங்கேயே அவளுக்கு மரணம் சாசனமாக கிடைக்க போகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
சாத்தான் 1 "ஆஆஆஆ...." பெரும் அலறல் சத்தம் அந்த சத்தத்தின் குரல் நிச்சயமாக பெண்ணாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெண்ணின் குரல் நிசப்தமாக உறங்கிக் கொண்டிருந்த அந்த வீட்டின் உறுப்பினர்களை பயம் கொள்ள செய்து எழுப்பியது. அவள் போட்ட சத்தம் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் கொலை நடுங்கவே செய்து விட்டது. விடிந்தும் விடியாத அந்த இரவில் கதவை திறந்தாள் அவள். நாற்றம் மூக்கை தொலைத்தது மூக்கை மூடிக்கொண்டால் கதவை எதற்காக திறந்தால் என தெரியாது ஆனால் கதவை திறந்தவள் காலில் அது தென்பட அலறியே போனாள். இதுவரையிலும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap