Skip to content
வேரில் நான் அழுதேன்

வேரில் நான் அழுதேன்

60
820
EBOOK•
Completed#Lovestory#VerilNaanAzhuthen#Love

About

சர்வமும் அவனென கரம் பற்றியவளின் களங்கமில்லா உள்ளத்தில், கறைகள் உண்டென்று கருதி அவன் இழைத்த அநீதிக்கு, காலம் இழப்பை அவளோடு சேர்த்து அவனுக்கும் பரிசளித்தது. அவள் இழப்புக்கு அவன் இழப்பீடாய் தந்தது என்ன? அவன் பேரன்பும் பெருங்காதலும் அன்றி வேறேது அவள் காயம் ஆற்றக் கை கொடுக்குமாம்?
அத்தியாயம் 01 காலை வேளைக்கான அனைத்து பரபரப்பும் முடிந்து அதன் பின்னுள்ள சற்றே அமைதியான சூழலில் எஞ்சிய வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அந்த வீட்டின் மருமகள் ஆதிரா. தான் செய்யும் வேலைகளுக்கும் மேல் இடையிடையே மாமியார் ஏவும் தேவையே இல்லாத வேலைகளையும் முக சுணக்கமேயின்றி செய்து கொண்டிருந்தாள் அவள். பார்த்திருந்த அருணாச்சலம் மனைவியின் செயலில் அதிருப்தி அடைந்தார். அவர் நினைத்தால் இப்படி செய்யாதே என மனைவியைக் கண்டிக்கலாம் தான். ஆனால் அதன் பின் தான் விசாலாட்சியின் ஆவேசம் இன்னும் அதிகரிக்கும், அதன் பலனும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap