
கை விடுவேனோ கண்மணியே!
20
188
EBOOK•
Completed#doctor nurse romance
About
பாரதி ஒரு நர்ஸ். தன் வேலை தன் சேவை என்றிருக்கும் அவள் விமலநாதனை சந்திக்கிறாள். காதல் வயப்படுகிறாள். ஆனால் அவன் மணந்து கொள்ள கேட்கும்போது மறுக்கிறாள். ஏன் விமலநாதனை மணந்து கொள்ள மறுக்கிறாள்? அவள் மறுப்பதற்கு விமலின் எதிர்வினை என்ன? பாரதியின் வாழ்வில் நடந்த பிரச்சனைகள் என்ன? அவளது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்ததா? இருவரும் இறுதியில் இணைந்தார்களா? கதையில் படித்து தெரிந்து கொள்ளலாம்
என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
தூரிகா சரவணன்
கைவிடுவேனோ கண்மணியே! தூரிகா சரவணன் அத்தியாயம் 1 ஞாயிற்றுக்கிழமை... பின்மதிய வேளை. சென்னை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகள் சோம்பல் போர்வையுடன் காட்சி அளித்தன. அப்போது...அவள்... ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டும் நடக்கும் போதே இருபுறமும் பார்வையால் துழாவிக் கொண்டும் நடந்தாள். இரு மருங்கிலும் பெரிய பெரிய வீடுகள், இல்லை, இல்லை பங்களாக்கள் நிறைந்த சாலை அது. ஒரு பங்களாவின் முன் பெரிய கம்பிக் கதவின் அருகே நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டு இருந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap