Skip to content
வாராதிருப்பானோ!

வாராதிருப்பானோ!

0
99
EBOOK
Completed#Contemporary romance

About

விஜயாதித்தன் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவன். மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரியம்வதாவைக் காதலித்து மணக்கிறான். திருமணம் முடிந்தவுடன் பழிவாங்கத்தான் மணம் செய்து கொண்டதாகக் கூறுகிறான். ஏன் அப்படி கூறினான்? பிரியம்வதாவை பழிவாங்கும் அளவு அவள் மேல் என்ன கோபம்? பிரியம்வதா அவன் கோபத்தை எப்படி எதிர்கொண்டாள்? நினைத்தபடி அவளை விஜய் பழிவாங்கினானா? அல்லது அவள் அன்பில் மூழ்கி, தன் முயற்சியைக் கைவிட்டானா? தெரிந்து கொள்ளலாம்! "வாராதிருப்பானோ"வில் என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் தூரிகா சரவணன்

வாராதிருப்பானோ!

அத்தியாயம் 1

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்

குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி

என்றன் விழுத்துணையே

நெற்றியில் பட்டையாய் விபூதியும்... அதன் நடுவே சந்தனமும்... சந்தனத்தின் நடுவே குங்குமமும்... கழுத்தில் நீண்ட ருத்ராட்ச, ஸ்படிக மாலைகளும், இடையில் காவி நிற வேட்டியும் அதன் மேல் மஞ்சள் நிறத் துண்டும் அணிந்து சைவப் பழமாக நின்றிருந்தார் கண்ணபிரான்.

கல்லும் கசிந்துருகத் தொடர்ந்து நூறு பாடல்கள் க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap