Skip to content
குளிர் தருவே! தரு நிழலே!

குளிர் தருவே! தரு நிழலே!

0
84
EBOOK
Completed

About

மனைவியை இழந்த விக்னேஷ் கார்த்திக், கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் ஜெர்மனியில் வசிக்கும் நீலாயதாட்சி. இவர்கள் தொழில் நிமித்தமாக ஒன்றிணைந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இருவருக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ன? தங்களின் பழைய வாழ்வை மறந்து புதிய வாழ்வில் தங்களை இணைத்துக் கொள்கிறார்களா? என்பதைக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் தூரிகா சரவணன்

குளிர் தருவே! தரு நிழலே!

அத்தியாயம் 1

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அலைபேசியில் ஒலித்தது பாடல்.

அவனது காலை நேர விழிப்பு மணியோசை அந்த பாடல்தான்.

இறை நம்பிக்கை என்று பெரிதாக அவனுக்கு எதுவும் இல்லையென்றாலும் அவன் மனத்திற்குகந்தவளின் மனத்திற்குகந்த பாடல் என்பதால் காலை நேரம் அந்தப் பாடலுடன்தான் விடியும் அவனுக்கு.

பாடல் ஆரம்பிக்கும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap