
கண்டேன் என் ஜீவாமிர்தம்
20
205
EBOOK•
Completed
About
ஆனந்த ஸாகரம் என்ற ஒரு எஸ்டேட் அதிபர் ஜெய்நந்தன் தன்னுடைய பிரியமான மகன் ஜீவானந்தனை தன்னிடம் இருந்து ஒதுக்கி நிறுத்தி இருக்கிறார். அந்தக் குடும்பத்தில் இருந்து ஜீவாவின் ஒதுக்கத்திற்கு என்ன காரணம்? ஜீவா எப்படி ஆனந்த ஸாகரத்திற்குள் வருகிறான்? தன் தங்கைகளையும் மாமன் மகளையும் எவ்வாறு அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான் ஆனந்த ஸாகரத்தில் அவனது வாழ்க்கை எப்படி நகர்கிறது என்று சொல்லும் ஒரு அழகான குடும்பக் கதை தான் இந்தக் கண்டேன் என் ஜீவாமிர்தம்!
கண்டேன் என் ஜீவாமிர்தம் வைஷு அய்யம் 1 "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!" என்று பூஜையறையில் நின்று பாடிக் கொண்டு இருந்த தன் மகள் ஷைலஜாவிடம் தன் அன்னை ஸாகரியின் பிரதிபிம்பத்தை பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன். "ஆரத்தி எடுத்துக்கோங்கப்பா!" என்று சொன்னவளை கண்கள் நிறைய பார்த்துக் கொண்டு நின்றிருந்தவரை, "அப்ப்ப்ப்பா.......என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க....?" என்ற மகளின் உலுக்கல் தன்னிலைக்கு கொண்டு வந்தது. "ஸாரிடா ரூபி; ஏதோ யோசனை, உன் ஸாங் வழக்கம் போல...
Loading...
Enjoyed this?
Sign in to clap