
எதிர் துருவம் (வேண்டுமடி நீ எனக்கு சீசன் 2) : Edhir Dhuruvam
0
134
EBOOK•
Completed
About
இது நந்தன் - மித்ரா ஜோடியின் மோதலும் காதலும். இது 'வேண்டுமடி நீ எனக்கு' கதையின் சீசன் 2.
கதையின் நாயகன் தனக்கு மனைவியாக வரப்போகும் பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வரிசையாக கண்டிஷன்களை அடுக்குகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக, தனக்கு சிறிதும் ஒத்துவராத நாயகியுடன் கட்டாயத் திருமணம் ஆகிறது. எதிரெதிர் துருவமாக இருக்கும் இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைகிறார்களா? நாயகனின் கண்டிஷன்களை வைத்தே அவனை மாற்ற முற்படும் நாயகி. இதில் சீசன் -1 இன் ஜோடியான பிரியன்-மேகாவின் பங்கு என்ன? வாசியுங்கள்!
அத்தியாயம் - 1 கண்ணாடி முன் நின்று தன் புடவைத் தலைப்புக்கு ஃப்ளீட்ஸ் வைத்து பின் பண்ணிக் கொண்டு புடவைக் கொசுவத்தை சரி செய்து கொண்டே தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் மேகா. இந்த இரண்டு வருடத்தில் இன்னும் கொஞ்சம் அழகாகி இருந்தாள். கன்னங்கள் இரண்டும் புஸ்ஸென்று கொஞ்சம் உப்பி பளபளவென வாளிப்பாகி மின்னிக் கொண்டிருந்தது. உடல் இலேசாக முன்பை விட கொஞ்சம் சதை போட்டிருந்தது. மை தீட்டிய இரண்டு கண்களும் பெரிதாக பளிச்சென்று துறுதுறுவென சிமிட்டியபடி இருக்க.. தன்னை தன் அழகை முழுதாகக் கண்ணாடியில் பார்த்துக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap