
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்!!
1
105
SERIES•
CompletedIthayamozhi championship 2026#Love#LoveStory#Romance#EndhanNenjilPahimam#Ithayamozhi#Contest
About
உயிரிலே உறைந்துபோன காதலும் கரைந்துபோகுமோ! தொலைந்துபோன நிலவு ஒன்று அவள் வானில் தோன்றுமோ!! மறந்துபோன நேசமெல்லாம் அவளது நெஞ்சம் சுரக்குமோ!! அவனது வருகையால், தரிசான அவள் நெஞ்சில் பெருமழையும் பெய்திடுமோ!!!
Disclaimer:
இதயமொழி சாம்பியன்ஷிப்பில் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு இந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.
தனது மேலாளர் உடனான சந்திப்பை முடித்துவிட்டு தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான், சந்தீப். நீண்ட பெருமூச்சு எடுத்து, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், தனது கைபேசியை எடுத்து நேரம் பார்த்தான். மாலை 7.35 என்றது. மடிக்கணியை மூடி பைக்குள் வைத்தவனுக்கு ஏதோ தோன்ற தனது கைபேசியை மீண்டும் பார்த்தான். அம்மாவிடமிருந்து வாட்சப் செய்தி ஒன்று வந்திருந்தது. ‘தேவையென்றால் தயங்காமல் அழைத்து பேசுபவள், இப்பொழுது எதற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாள்?!’ என்று குழம்பியவன், அதனை வாசிக்க முற்பட்டான். கைபேசியில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap