Skip to content
நந்தவனப் பறவைகள்

நந்தவனப் பறவைகள்

27
133
SERIES
OngoingIthayamozhi championship 2026

About

'நந்தா டெக்ஸ்டைல்ஸ்' என்ற ஜவுளிக்கடையின் உரிமையாளன் நந்தகுமார். ஊழியர்களுக்கு அண்ணன், தம்பி போன்ற உறவு காட்டும் அன்பு நிறைந்தவன். ஒரு பெரிய ஜவுளிக்கடை அதிபரின் வாரிசுகளில் இவனும் ஒருவன். ஆனால், குடும்பத்தை விட்டு தனியாக இருக்கிறான். ஏன்? தன் ஊழியர்களில் தொடங்கி அண்ணன் மகளின் காதல் வரை பல இதயங்களைச் சேர்த்து வைக்கும் இவன் இதயம் தனித்து இருப்பது ஏன்? அது இன்னொரு இதயத்துடன் இணையுமா? அதைச் செய்யப் போவது யார்?
அத்தியாயம் 1 ‘’நந்தா சார்… ரெடி!’’ கண்ணாடித் தடுப்பு அறை கதவைக் கொஞ்சமாகத் திறந்து, தலையை உள்ளே நீட்டிச் சொன்னாள் ஜீவிதா. மேஜை மேலிருந்த மடிக்கணிணியில் தட்டிக்கொண்டிருந்த நந்தகுமார், நிமிர்ந்துப் புன்னகையுடன் தலையாட்டினான். சுட்டுவிரல் நுனியால் ஒற்றியெடுத்து வைத்துக்கொண்டது போல நெற்றியின் மையத்தில் குங்குமப் பொட்டு. உதடுகளின் விளிம்புகள் வரை வளைந்திருக்கும் அடர்த்தியான மீசை. அந்த இரு விளிம்புகளிலிருந்து கிளம்பி, கன்னம் முழுக்க சீராகச் செதுக்கிவிடப்பட்ட கறுப்பு புற்கள் போல தாடி. அந்தக் கறுப்புப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap