Skip to content
என் காதல் விதிகள், உன் நேசம் மீது

என் காதல் விதிகள், உன் நேசம் மீது

43
186
SERIES
OngoingIthayamozhi championship 2026#காதல், அன்பு, குடும்பம்

About

இதயமொழி championship-ல் பங்கு பெரும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. வேறு எந்த தளத்திலும் அல்லது புத்தகமாகவோ வெளிவரவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

காதலில் எத்தனை பிரச்சனைகள், திருமணம் என்ற அமைப்பு இல்லாமல் காதலிக்கிறோம் கொஞ்ச நாட்கள் சேர்ந்திருந்தால் தான் எங்களால் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்து ஒன்றாக வாழ முடியுமா என்பது தெரியும் என்று கூறும் ஜோடிகளுக்கு காதல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் கதை..

அத்தியாயம் 1 பார்த்தவுடன் பழகாதே.. பழகியவுடன் இணையாதே.. இணைந்தவுடன் பிரியாதே.. பிரிந்தவுடன் வருந்தாதே.. வருந்திய உடன் தேடாதே.. யாரோ….. இரண்டு நாட்களாக மீராவிற்கு வேலையே ஓடவில்லை.. தப்பும் தவறுமாக செய்த வேலையை, கேன்சல் செய்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.. தலைவலி மண்டையை பிளந்தது.. சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. ஆனால் இந்த வேலையை மாலைக்குள் முடித்துக் கொடுத்து வேண்டும்.. நாளை என்று ஒத்திப் போட முடியாது.. ஏற்கனவே இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap