
அல்லியங்கோதை (தீபாஸ்)
0
48
SERIES•
Ongoing
About
திருப்புறம்பியம் போர் (கி.பி. 879 அல்லது 885) தமிழக வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாகும். இது பல்லவ-பாண்டிய சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கும், சோழப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்டது. இப்போரின் முடிவில் தொடங்கும் பல்லவ தேசத்தின் வீழ்ச்சி... அதற்கு காரணமான ஆதித்தச் சோழன். சோழ தேசத்தின் எழுச்சி... அரசர் கோகண்டன் நாராயணன் மகளாக அல்லியங்கோதை (அல்லியங்கோதை புனைவு) வைத்து வரலாற்றின் அடிப்படையில் புனையப்பட்ட கதை இது வாசித்து கருத்தைபகிரவும்.
அத்தியாயம் 01 அடிவானம் வரை பச்சைப் பசேலென விரிந்து கிடக்கிறது அந்த வயல்வெளி. பல்லாண்டுகளாகப் பகைவர்களின் பிடியில் சிக்கி, வறண்டு கிடந்த நிலம் அது. இன்று, சோழர்களின் பேராற்றலால் மீட்கப்பட்டு, காவிரியின் கிளைநதி வயல்வரப்புகளை உடைத்துக் கொண்டு புதுப்புனலாய் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. தங்கள் முன்னோர்கள் பல்லவர்களிடம் பறி கொடுத்த நிலத்தை, மீண்டும் தங்களை ஆள வந்த சோழ இளவரசனே மீட்டுக் கொடுத்துவிட்டான் என்ற பேரானந்தத்தில் கிராம மக்களின் முகங்களில் நிம்மதி தாண்டவமாடுகிறது. அந்த மண்ணின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap