Skip to content
காதல் தேவை(வதை)யே💔

காதல் தேவை(வதை)யே💔

6
75
SERIES
OngoingIthayamozhi championship 2026#love#loveandloveonly#romance#romantic#antihero#painfullove
AbinayaShree
AbinayaShree

About

"இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை."

கல்லூரிச் சாலைகளில் தொலைந்து போன காதல், காலத்தின் விசித்திரத்தால் 'வாடகைத் தாய்' எனும் பந்தத்தில் வந்து நிற்கிறது. மௌனங்கள் பேசிய பழைய காயங்களுக்கு, இந்தப் புதிய உயிர் மருந்தாகுமா? அல்லது பிரிவின் வலியை இன்னும் அதிகமாக்குமா? மனதில் அவனையும்… கருவில் அவன் அண்ணனின் வாரிசையும் சுமந்து நிற்பவள்… அவனுக்குத் தேவையாவாளா? அவன் காதல் தேவதையாவாளா?!

அந்த வீட்டு வரவேற்பறையின் நடுவே, அவள் உயிரற்ற சடலமாகக் கிடத்தப்பட்டிருந்தாள். அவளது உடல் ஒரு வெள்ளை பெட்ஷீட்டால் முழுமையாக மூடப்பட்டிருக்க, முகம் மட்டுமே வெளியாருக்குத் தெரிந்தது. புன்னகை மலர்ந்திருக்கும் அந்த எழில்முகம், இப்போது எந்தச் சலனமும் இன்றி வெளிறிப்போய், உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதைப் போல அமைதியாகக் காட்சியளித்தது. அவளது கழுத்தை அலங்கரித்திருந்த ரோஜா மாலைகள் மரணத்தின் குளுமையைத் தாங்கி அசைவற்றுத் தொங்கின. ரோஜாக்களின் நறுமணமும், சுற்றிலும் சுருள் சுருளாக எழும்பிப் பரவிய சாம்பிராணிப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap