
என் அன்பின் மொழி நீயடா
9
104
SERIES•
OngoingIthayamozhi championship 2026#YazhSathya#French Hero + Tamil Heroine#Feel good love story#Sri Lankan Tamil Story#Based on true events#Second marriage story
About
இதயமொழி championship ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு பிரான்ஸில் வாழும் தமிழர்கள் சிலர் எதிர்கொள்ளும் குடும்பவியல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக எழுதப்படும் ஒரு புனைவு ஆகும். இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.
அத்தியாயம் - 01 "டேய்! கையை எடுடா நாயே!" அந்தக் கத்தல் தூய யாழ்ப்பாணத் தமிழில், ஒரு பத்து வயதுச் சிறுவனின் தொண்டையிலிருந்து அத்தனை ஆக்ரோஷமாகப் புறப்பட்டு, அந்தப் பிரெஞ்சு வகுப்பறையின் அமைதியைக் கிழித்தெறிந்தது. ஆன்சி நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த ஒரு அரசுப் பள்ளியின் CM1 (நான்காம் வகுப்பு) வகுப்பறையின் வலது மூலையில், மேசைகளும் நாற்காலிகளும் சரியும் சத்தம் கேட்ட அடுத்த நொடி, கப்ரியல் தன் பேனாவை அப்படியே போட்டுவிட்டுத் துள்ளி எழுந்தான். அங்கே, யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அருண், சக...
Loading...
Enjoyed this?
Sign in to clap