
காலங்கள் தாண்டிய தேடல்
1
15
SERIES•
OngoingIthayamozhi championship 2026#Ithayamozhi championship 2026
About
யுகங்களாய் காத்திருந்தான் அவள் வரவிற்காக. அவளது நினைவலைகளோடு. யுகங்கள் கூட மௌனமாய் போனது அவனது காத்திருப்பில்.
உயிர் இருந்தும் உயிரற்றிருந்தாள் தன் உயிரின் அர்த்தத்தை தேடி. அவனின்றி அவள் உயிரின் அர்த்தம் ஏது என்று அறியாமல்!
யுகங்கள் கடந்தது! காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் இவர்களது காத்திருப்பும் தேடலும் மௌனமாய் போனதோ!
"இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை."
காலை எட்டு முப்பது. சென்னையின் புகழ்பெற்ற அந்தத் தன்னாட்சிக் கல்லூரியின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தாள் நிகதி. அவள் காலடி எடுத்து வைத்தவுடனேயே, அவளைச் சுற்றியிருந்த காற்றில் ஒருவித நடுக்கம் பரவியது போலிருந்தது. நேர்த்தியாகக் கட்டிய பருத்திச் சேலை, கலைந்துவிடாத கொண்டை, கையில் சில புத்தகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக முகத்தில் இருக்கும் அந்த அசைக்க முடியாத விறைப்பு: இவைதான் இருபத்தி ஏழு வயதே ஆன நிகதியின் அடையாளம். அவளது இந்த அதீத ஒழுக்கமும், யாருடனும் ஒட்டாத குணமும் அவளைப் பேராசிரியர்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap