
ஒரு கேள்விக்குறி ஆச்சரியக்குறி ஆகிறது! : Oru Kelvikuri Acharyakuri Aagiradhu!
25
149
EBOOK•
Completed
About
கதையின் நாயகி மேக்னா, தன் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், தவறான முடிவொன்றை எடுத்து அனைவரின் மனதிலும் கேள்விக்குறி ஆகிறாள். ஒரு கட்டத்தில், தான் ஏன் தான் இப்படி செய்தோம் என்று தனக்குத் தானே கேள்விக்குறி ஆகிறாள். பிறகு யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்து அனைவருக்கும் ஆச்சரியக்குறி ஆகிறாள். அவளுடைய வாழ்க்கையில் நடந்தது என்ன? இது ஒரு உண்மை நிகழ்வை வைத்து அதில் கற்பனையைக் கலந்து எழுதிய கதை. இது 'ஜோதி தமிழ் நாவல்கள்' தளத்தில் நடந்த போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாயம் -1 ஆதவன், தான் வந்த வேலையை முடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான இளம் மாலைப்பொழுது அது. மதுரை தமுக்கம் மைதானம். அது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அந்நேரமே சேரத் துவங்கியிருந்தது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் சித்திரைப் பொருட்காட்சி அந்த வருடமும் ஆரம்பித்துக் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருட்காட்சி என்றால் கூட்டத்திற்குப் பஞ்சமா என்ன? அதுவும் ஞாயிற்றுக்கிழமை மாலை என்றால் கேட்கவா வேண்டும்! எப்போதும் போல் திருவிழா கூட்டம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap