
நிறையும் நேசம் நீயல்லவா?!
4
63
SERIES•
OngoingIthayamozhi championship 2026#Student professor love#Emotional love#Struggle for love#Ooty lovedale
About
ஊட்டி லவ்டேலில் காளான் தொழில் செய்யும் நாயகி. அவள் முனைவர் பட்டம் பயிலும் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் நாயகன்.. இருவரின் இதயத்திலும் காதலெனும் மூன்றெழுத்து அழகாய் தன் தடம் பதிக்க, நாயகனின் பெற்றோர் அதற்குத் தடை விதிக்கின்றனர்.. கண்ணியம் மாறா காதலில் நிலைத்து, போராடி, வெற்றி கண்டு திருமணத்தை எப்படி அடைகின்றனர் என்பதைக் காட்டும் காதல் நிறைந்த கதையே, நிறையும் நேசம் நீயல்லவா!? முழுமுதற் காதல் கதை
01 அழகிய அதிகாலை வேளை.. கோவையிலுள்ள காரமடையின் குளிருக்கு இதமாக, போர்வையை நன்கு போர்த்திக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் கபிலன். அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள் என்பதால், சற்று ஆசுவாசமாக அவன் உறங்கிக் கொண்டிருக்க, “கபிலா….” என்று அவனைத் தட்டி எழுப்பினார் அவனது அக்கா கற்பூரவள்ளி. “ப்ச்.. அக்கா.. லீவுதானே அக்கா?” என்று அவன் போர்வைக்குள்ளிருந்தபடி முனங்க, “டேய்.. வாசல் மட்டும் தெளிச்சுட்டு வந்து படுடா.. அம்மா கத்தப் போறாங்க. எனக்கு டயர்டா இருக்கு” என்று கற்பூரவள்ளி கூறினார். “ப்ச்.....
Loading...
Enjoyed this?
Sign in to clap