Skip to content
கோளகனின் புதுமலரே

கோளகனின் புதுமலரே

47
404
SERIES•
CompletedIthayamozhi championship 2026#ஹேமாகோபால்
Hema Gobal
Hema Gobal

About

இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.

சாவகச்சேரி செயலகத்தில் கண்டிப்பான அதிகாரியாக வலம்வரும் நீரஜனின் வாழ்வில், காணாமல் போன மாமன் மகள் தன்விகா அவனது சொந்தக் குழந்தையோடு திடீரென மீண்டும் வருகிறாள். தன்னிடமிருந்து மகனை மறைத்ததன் பின்னணியில் உள்ள ரகசியங்களை அவிழ்த்து, அவளது காதலை நீரஜன் அடைவானா என்பதே இக்கதை!

வாசிக்க விருப்பமுள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

அத்தியாயம் 1 அன்று சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி பிரதேச சபையில் வேலைபார்க்கும் எல்லோருமே, தாங்கள் இதுவரை காலமும் நிலுவையில் வைத்திருந்த வேலைகளை எல்லாம் முடிக்கும் தீவிரத்தில், மதியத்தின் பசியையும் மறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்யும் பத்மினியோ தன்னிலும் இரு வயது கூட இருந்தாலும் நன்றாக நட்பாக பழகிக் கொண்டிருக்கும் தோழியான பக்கத்து மேஜை பரிமளாவிடம், “என்னடி, ஒரு வருசமா கிடப்பில போட்டிருந்த வேலையெல்லாம் ஒரே நாளில முடிக்கச் சொன்னா நான் எப்பிடிடி முடிக்கிறது?” என்று...
Loading...

Enjoyed this?

Sign in to clap