
கோட்ட வூடு
0
7
EBOOK•
Completed
About
கிராமத்தில் கோட்டவூடு என்று அழைக்கப்படும் பெரிய வீடு அதன் புதிர்கள் பலி வாங்கப்பட்ட உயிர்கள் இன்றைய அதன் நிலை என்று அமானுஷ்யமாக போகும் ஒரு சிறுகதை. ஒவ்வொரு வீட்டிற்கும் அதற்குரிய கதை இருக்கும் தானே!
கோட்டவூடு
கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன்.
பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப் போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போத் தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப் போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம்.
வெத்தலையை பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால் நீட்டிட்டு உக்காந்திருக்குற கிழவியைப் போல, பல ஆளுங்களையும், காலங்களையும் முழுங்கிட்டு உக்காந்திருக்கு வானத்தை தொட்டுடற மாதிரி உசந்திருந்த அந்த கோட்ட வூ
...Loading...
Enjoyed this?
Sign in to clap