
இராவண வத்சலா
53
353
SERIES•
Ongoing#kalaisree_Novels#TeluguHero_TamilHerone#Lovestory
About
தன் வாழ்க்கைக்காகவும்,உயிருக்காகவும் தன் அடையாளத்தை துறந்து முக்காட்டிற்குள் ஒளிந்து இருப்பவளின் உண்மையான அடையாளத்தை காரசாரத்திற்கே பெயர் பெற்ற குண்டூர் நகரின் முடிசூடா வாரிசான ருத்ர பிரதாப் ரெட்டி (RPR)அறியும்போது அவள் அடையாளத்தை துயில் உரிப்பனா? அல்லது அடைக்கலம் தருவானா?... குண்டூர் மிளகாய் நெடிக்கு,நடுவே மதுரை குண்டு மல்லியின் வாசம்..
இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.
எல்லையைத் தாண்டிய தஞ்சம் அத்தியாயம் -01 குளிர் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்க, தூரத்தில் ரயில்வே சிக்னலின் சிவப்பு வண்ண விளக்கின் ஒளி பளிச்சென்று தெரிந்தது. கல்மேடையில் அமர்ந்திருந்த அன்னம், தன் உடைப் பையில் இருந்த சால்வையை எடுத்துத் உடம்பைச் சுற்றிப் போர்த்திக் கொண்டார். மேலே தொங்கிக் கொண்டிருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்க்க, அதுவோ மணி 11 என்று காட்டியது. அடுத்த ரயிலுக்கான அறிவிப்பு மைக்ரோபோனில் ஒலிக்க, அவருக்குள் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. அதே வேளையில், ஆள் நடமாட்டமே அற்று வெறிச்சோடி...
Loading...
Enjoyed this?
Sign in to clap