Skip to content
ஆயிரம் நிலவுகள் உன்னோடு

ஆயிரம் நிலவுகள் உன்னோடு

1
29
SERIES
OngoingIthayamozhi championship 2026#Lavanya Rajesh #Romantic Novel #Love Story

About

ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் நாயகியை திருமணம் செய்யும் நாயகன் பின் ஆயிரம் நிலவுகள் சேர்ந்து வாழ- அதாவது 80 ஆம் கல்யாணம் வரை சேர்ந்து வாழ ஆசைபடும் கதை. இது முற்றிலும் எனது கற்பனையில் உண்டாகி கொண்டிருக்கிற , இது வரை வேறு எந்த தளத்திலும் வேறு எந்த வடிவிலும் வெளிவராத முற்றிலும் புதிய கதை! வாசித்து விமர்சியுங்கள் தோழமைகளே!

“சர்வ மங்கள மாங்கல்யே சர்வார்த்தக சாதகே! சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே!” என்று மனதுள் சுலோகம் சொல்லியபடி கண்கள் நிறைய ரெங்கநாயகி தாயாரை தரிசித்து நிரப்பிக் கொண்டாள் மஹா. மஹா லக்ஷ்மி. முழுப் பெயர் வர மஹா லக்ஷ்மி! “சேவிச்சவங்க நகர்ந்து வழி விடுங்கோ!” பட்டர் சொல்ல, மீண்டும் ஒரு முறை தாயாரை கண்கள் நிறைய தரிசித்து விட்டு, தீர்த்தம் மற்றும் மஞ்சள் பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டு திரும்பியவள் கண்கள் எதிர் வரிசையில் நின்று தாயாரை தரிசனம் செய்து விட்டு திரும்பியவனைக் கண்டதும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap