
இவனும் இராமனே : Ivanum Iramane
0
102
EBOOK•
Completed
About
அந்தப் பாற்கடலில் இருக்கும் ஶ்ரீமன் நாராயணரும் அவருடைய துணைவியார் லெட்சுமி தேவியும், நம் கதையின் நாயகன் ராம்முக்கு, அவனுடைய மனைவியைக் காப்பாற்ற, மிகப்பெரிய டாஸ்க் ஒன்றைத் தருகின்றனர். தன் தோழி நேத்ராவுடன், காடு, மலை, ஆகாயம் என்று சென்று, பகவான் தந்த அந்த சோதனையை மேற்கொள்கிறான் ராம். சாதனையை வெற்றிகரமாக செய்து முடித்து தன் மனைவியைக் காப்பாற்றுகிறானா ராம்? நாராயணரும் லெட்சுமி தேவியும், தன் பக்தனால் மனம் குளிர்ந்தனரா? கதையை வாசியுங்கள்.
அத்தியாயம் - 1 'சீதாராமன் இல்லம்'. அந்த வீட்டின் ஆளுயர கேட்டின் முன்பாக மாட்டப்பட்டிருந்தது அந்த பெயர்ப்பலகை. கேட்டின் இருபுறமும் வீட்டின் உள்ளே ஏறிச் செல்வதற்கு சிறுசிறு படிகளும் அதன் நடுவில் வாகனங்கள் நுழைவதற்கு ஏற்றவாறு சாய்வாகவும் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவுடன் நடுவில் நடைபாதையும் இரு புறமும் சதுர வடிவில் அழகான சிறிய இடத்தில் பச்சைப்பசேல் என்று புல்வெளியும் அதில் குரோட்டன்ஸ் செடிகள், செம்பருத்தி, துளசி, பிச்சிப்பூ, மல்லி, ரோஜா என்று விதவிதமான பூ வகைகள் பல வண்ணங்களில் பூத்துக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap