Skip to content
உறவுகள் தொடர்கதை

உறவுகள் தொடர்கதை

0
0
SERIES
Completed

About

டைரக்டர் தன்ராஜ் மற்றும் நடிகை ரூபாவதியின் மகன் சூர்யா, சினிமாவையே வெறுக்கும் அமிர்தவர்ஷிணியின் மகள் சிந்து இவர்களின் காதல் திருமணத்தில் முடியுமா?

வசந்த், சஹானாவின் நட்பு காதலில் முடியுமா?

அமிர்தவர்ஷிணியை சுற்றி இருக்கும் மர்மம் என்ன? முதலிய கேள்விகளுக்கு விடையே இக்கதை.

காதல், மோதல், திருப்பங்கள், விறுவிறுப்பு நிறைந்த தொடர்.

ராகமாளிகா வாசலிலேயே வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனர் வசந்தும் சஹானாவும். “என்ன வசந்த் அம்முவும்,தம்முவும் போய் ரொம்ப நேரம் ஆகுது… இன்னும் வரலையே.” “ அத தாண்டி நானும் பாத்துகிட்டு இருக்கேன். நம்ம யார் சொல்லியும் கேட்காத அம்மு, தம்மு வந்து கூப்பிட்ட உடனே கிளம்பிட்டாங்க. நல்ல சேதியோட வரணும்னு வேண்டிக்கோ!” “அம்மு ஓ.கே. சொன்னாலும் சூர்யாவோட பேரண்ட்ஸ் வேண்டாம்னுட்டாங்க, ஏன்னு தெரியல… அதுக்கப்புறம் அம்மு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க… ஒரே குழப்பமா இருக்கு. ஆனா அவங்களுக்குள்ள ஏதோ ஒரு பெரிய மர்மம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap