
நிலவறை பொக்கிஷம்
0
6
EBOOK•
Completed
About
வணக்கம் தோழமைகளே!
நிலவறை பொக்கிஷம்
இக்கதை ஒரு பொக்கிஷத்திற்கான தேடல். நிலவறையில் உள்ள பொக்கிஷத்தை அடைய துடிக்கும் நிலவழகி, அப்பொக்கிஷத்தை காப்பாற்ற போராடும் இளவரசன்
மகேந்திரத்தை பழிவாங்க துடிக்கும் நிலவழகி, இவைகளுக்கிடையில் இளவரசரின் காதல், இளவரசி ஐராவதியின் வாழ்க்கை மற்றும் மகேந்திரபுரத்தின் பொக்கிஷம் ஆகியவற்றை நிலவழகியின் சூழ்ச்சியில் இருந்தும் வேங்கைகொண்டான் மற்றும் ஜார்ஜின் சதி வலையிலிருந்தும் இளவரசன் செழியன் எப்படி காப்பாற்ற போகிறான்? நிலவறை கைப்பற்றப்பட்டதா? அல்லது காப்பாற்றப்பட்டதா?
நிலவறை பொக்கிஷம் 1சிற்றன்ன ஓடை மஞ்சள் வெயில் மாலைப் பொழுது, அற்புதமான மனோரஞ்சித வேளை! தாவித் தவழ்ந்து ஓடி வருகின்ற அழகிய நீரோடையின் சலசலப்பும், மேடு பள்ளங்களில் பாய்ந்து படர்ந்து ஓடி வருகிற அந்த நீரோட்டத்தின் நிறைந்த பேரழகும், நளினம் கொண்ட நங்கை நடை பழகுவது போல ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையின் அருகே இருந்த மரங்களை தங்கள் வாழ்விடமாகக் கொண்ட பறவைகள், தம் கூடுகளைத் தேடி வந்து தன் துணையுடன் “கீச்! கீச்!” என்று கொஞ்ச, இருளில் மலர்ந்து இன்பமாய் மணக்கும் “இருள்நாறி, சேடல், தளவம்” போன்ற மலர்கள்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap