Skip to content
ஆதவனின் ஆதிரை...

ஆதவனின் ஆதிரை...

3
200
SERIES•
Ongoing

About

அறியாமல் அவன் செய்த ஒரு சிறு தவறு அவளின் வாழ்க்கையை புரட்டி போட்டது ... அவன் செய்த தவறுக்கு அவள் தண்டனை அனுபவித்து நிற்கதியாய் நின்றாள். ஒரு கட்டத்தில் அவளையே தன் காதல் மனைவியாக்கி காதலை திகட்ட திகட்ட கொடுக்கிறான் அவன். அவன் காதலில் அவன் கொடுத்த வலியை மறப்பாளா ? இல்லை அதே வலியை அவனுக்கு திருப்பி கொடுப்பாளா?

அது ஒரு தனியார் வங்கி. அங்கே ஆட்கள் வருவதும் போவதும் என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. எல்லோரும் அவரவர்கள் வேலையை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் மட்டும் டென்ஷனாகி அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த அம்மா எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க . இன்னிக்கு எதுக்கு 3 மணிக்கு பர்மிஷன் போட்டுட்டு வர சொன்னாங்கன்னு தெரியலையே. இப்ப எப்படி அந்த மேனேஜர் கிட்ட பர்மிஷன் கேட்கிறது என்று நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் . அவள் பெயர் ஆதிரை . அந்த தனியார் வங்கியில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap