Skip to content
மஞ்சள் கயிற்றில் மலர்ந்த காதல்

மஞ்சள் கயிற்றில் மலர்ந்த காதல்

2
14
SERIES
OngoingIthayamozhi championship 2026
Thamarai Selvi
Thamarai Selvi

About

கதையின் சுருக்கம்

பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளும் செந்தமிழனும் நித்யாவும், அந்நியர்களாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அன்பு, மரியாதை, நம்பிக்கை ஆகியவை அவர்களின் உறவை மெதுவாக இணைக்கின்றன. குடும்பத்தின் அரவணைப்பில் அந்த உறவு அழகான காதலாக மலர்கிறது. "மஞ்சள் கயிற்றில் மலர்ந்த காதல்" என்பது மனதை வருடும் ஒரு கிராமத்து குடும்பக் காதல் நாவல்.

திண்டுக்கல் மாவட்டத்துல இருந்த வாகைப்பட்டி கிராமம், விடியற்காலையிலேயே உயிர் பெற்று புத்தம் புது பொலிவோடு இயங்க ஆரம்பித்திருந்தது. கோயில் கோபுரத்தில் இருந்த ஒலிபெருக்கியில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருக்க, அந்த சத்தத்தோட போட்டி போட்டுக்கிட்டு சேவல்களும் கூவ ஆரம்பித்திருக்க இரவு முழுக்கப் பெய்த மழையால் மண் வாசனை காத்துல கலந்து ஊரு முழுக்கப் பரவியிருந்தது.

தெருவோர வேப்பமரத்திலிருந்து விழுந்த இலைகள் பனித்துளியோட மின்னிக்கிட்டு பச்சை வண்ண கற்கள் போல கிடந்தது. வீட்டுக்கு வீடு வாசல்ல பெரிய கோலம்,

...
Loading...

Enjoyed this?

Sign in to clap