Skip to content
காதலை ஆட்கொள்ளும் காதலா

காதலை ஆட்கொள்ளும் காதலா

21
369
EBOOK•
Completed

About

 ​அவன் பெயர் கூட அறியாதவள் அவள்,

அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன்.

ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,

அவன் உயிரின் ரகசியக் கவிதையானது.

​துரோகத் தீயும், விபத்தின் வலியும்,

அவனைச் சுற்றிலும் சூழ்ந்த போதும்,

அவன் டைரிக் காகிதத்தில் அவளே சுவாசமாகி போகிறாள்.

அந்தச் சுவாசம் தான் அவன் ஜீவனைக் காத்து அவனோடு கை சேர்ந்ததா இல்லையா என்று கதையை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

காதலை ஆட்கொள்ளும் காதலா...

திக்ஷிதா லட்சுமி

அத்தியாயம்- 1

அந்த பிரபல நகைமாளிகையில் பிறந்த நாள் பரிசாக சிறிய வெள்ளி மோதிரத்திற்கு ஒரு வித சங்கடத்துடன் பில் போடும் இடத்தில் நின்று இருந்தார்கள் மெல்லிசை மற்றும் அவள் தோழி பவித்ரா.

"நான் அப்போவே சொன்னேன் இந்த சின்ன மோதிரம் வாங்க இவ்வளவு பெரிய கடைக்கு வரணுமானு கேட்டேனா இல்லையாடி" என்று கிசுகிசுப்பாக கடிந்துக் கொண்ட மெல்லிசையை திரும்பி பார்த்த பவித்ரா,

"அதுவும் இவ்வளவு பெரிய மாளிகைக்குனு சொல்ல மறந்துட்ட" என்று கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்து பார்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap