
சதுரங்க சிம்மாசனம்
40
0
SERIES•
Ongoing
About
ஒரு அரச தம்பதிகள் மர்மமான மரணம்…
ஒரு ரகசியத்தை சுமக்கும் பழைய தலைமுறை…
உண்மையை கண்டுபிடிக்க போராடும் வாரிசுகள்…
கொற்றவை நாட்டின் அரண்மனையில் ஒவ்வொரு சிரிப்பிற்குப் பின்னாலும் ஒரு ரகசியமும், ஒவ்வொரு உறவின் பின்னாலும் ஒரு சொல்லப்படாத உண்மையும் மறைந்திருக்கிறது.
நட்பா? துரோகமா?
பாசமா? பழிவாங்குதலா?
அரியணையை அடைய முயலும் ஆசையா… அல்லது பல ஆண்டுகளாக புதைக்கப்பட்ட உண்மையா?
கடந்த காலத்தின் பாவங்கள் நிகழ்காலத்தின் வாழ்க்கையை மாற்றும்போது, அந்த நிழல்களின் உண்மையான வாரிசுகள் யார்?
இரவு. கொற்றவை நாட்டின் பழமையான சிவன் கோவில் முழுவதும் அமைதியில் மூழ்கியிருந்தது. கோவிலின் அருகே இருந்த குளத்தின் நீரில் நிலவொளி வெள்ளி துகள்களாய் சிதறிக் கிடந்தது. ஆனால். அந்த அமைதிக்குள் ஒரு சதி அரங்கேறிக் கொண்டிருந்தது. குளத்தின் கரையில், கொற்றவை நாட்டின் அரசரும் அரசியாரும் பலவீனமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களது முகம் வெளிறிப் போயிருந்தது. உடலில் இருந்த சக்தி மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கொடிய விஷம் அவர்களது இரத்தத்தில் கலந்து விட்டது என்பது தெளிவாக தெரிந்தது. அவர்களுக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap