
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா? (தீபாஸ்)
About
" உலகம் அவனை ரவுடி என்று பார்த்தது...
சிலர் அவனை பணக்காரன் என்றார்கள்...
சிலர் அதிகாரம் என்றார்கள்...
ஆனால், அவன் மனதை உண்மையாகப் படித்தது ஒரே ஒரு ஜோடி கண்கள் மட்டுமே...
அந்தக் கண்களின் காதல்தான் இந்தக் கதை.”
தீபாஸ் எழுதிய “பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?”
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?
தீபாஸ்
அத்தியாயம் 01
கம்பீரமான ஆண்மகன் நிலவரசு.
எப்பொழுதும் மடிப்பு குலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், காலில் பார்க்க சாதாரணமாகத் தெரியும் செருப்புடன், மிகவும் எளிமையான தோற்றத்தில் இருந்தாலும், ஒரு மரியாதை கலந்த பயம் பார்ப்பவர்களுக்குத் தொற்றிக்கொள்ளும். (அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த பிராண்ட் செருப்புகளின் விலை ஆயிரக்கணக்கில் இருக்குமென்று.)
கருப்பு அழகில்லை என்று யார் சொன்னது?
இதோ இவனை பார்த்தபின், அந்த கருப்பு நிறமே இவனால் அழகாக மாறிவிட்டதோ என்று நினைக
...Enjoyed this?
Sign in to clap