
அகரம் முதல்... அனுராகம் வரை
1
24
SERIES•
OngoingIthayamozhi championship 2026
About
"வாழ்க்கையில் சில உறவுகள் முதலில் உருவாகின்றன... சில உறவுகள் விதியால் எழுதப்படுகின்றன."
தமிழ் இலக்கியத்தின் மீது அளவற்ற காதல் கொண்டவள் கார்மேகக் குழலி. புத்தகங்களே அவளது உலகம்.
மறுபுறம், ஒழுக்கமும் நேர்மையும் கலந்த தமிழ் இலக்கியப் பேராசிரியர் ஆதித்யன். மாணவர்களின் மதிப்பைப் பெற்ற ஆசிரியர். உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாத அமைதியான மனிதன்.
விதி, இருவரையும் ஒரு எதிர்பாராத திருமணத்தில் இணைக்கிறது.
"அகரம் கற்ற இரு இதயங்கள்... அனுராகத்தில் ஒன்றாகும் வரை தொடரும் ஒரு மறக்க முடியாத பயணம்.
"சில மனிதர்கள் நம் வாழ்க்கைக்குள் வருவதற்கு முன்பே, அவர்களுக்காக விதி சில பக்கங்களை எழுதத் தொடங்கிவிடும். அந்தப் பக்கங்கள் நம் கண்களுக்குத் தெரியாது... ஆனால், அவை நம் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிடும்." அதிகாலை நான்கரை மணி. இன்னும் முழுமையாக விடியவில்லை. கருநீல வானத்தின் விளிம்பில், வெண்மையான ஒளிக்கீற்றுகள் மெதுவாகப் பரவத் தொடங்கியிருந்தன. இரவின் அமைதியை மெல்ல அகற்றிக் கொண்டிருந்த அந்தப் பொழுது, காற்றில் ஒரு இனிய குளிர்ச்சி கலந்திருந்தது. தெருவின் ஓரத்தில் நின்றிருந்த வேப்பமரம், தென்றலின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap