
இதயம் வருடும் காதலே
About
நாயகன் ஜோஷுவா, நாயகி எமிலி இருவரும் சைபர் க்ரைம் ஆபிஸர்ஸ். அவர்கள் வீட்டு பக்கத்தில் குடியிருக்கும் இராமச்சந்திரன் ஒரு நாள் மர்மமான முரையில் தற்கொலை செய்துக்கொள்ள அதை இன்வெஸ்டிகேட் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதற்கு நடுவில் நாயகியின் காதலன் கிறிஸ்டியும், ஜோஷுவாவின் காதலி யாஷ்வியும் அவர்களின் வாழ்க்கையில் தென்றலாக நுழைகிறார்கள். டார்க் நெட், சைபர் கிரைம் என்று சுற்றி வந்தாலும் நடு நடுவில் ரொமான்ஸும் இளந்தென்றலாக உங்களை தழுவி செல்லும்.
ITHAYAM VARUDUM KAATHALE
அத்தியாயம்-1
சிபிஐ ஆபிஸ் .... மாலை நேரம் ...
சிஸ்டமை ஷட் டௌன் செய்துவிட்டு எழுந்த ஜோஷுவாவின் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சிணுங்கியது.
போனை ஆன் செய்து, "ஹ்ம்ம் சொல்லு எமில் ..." என்றான் புன்னகையுடன்.
ஜோஷுவாவின் இனிய தோழி தான் எமிலி. அவளும், ஜோஷுவாவும் சைபர் கிரைம் பிரிவில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள்.
"டேய், கிறிஸ்டி அவன் ஏற்பாடு செய்திருக்கிற கெட் டு கெதர்க்கு நம்மை இன்வைட் செய்திருந்தானே, ஞாபகம் இருக்கா? இன்னும் ஆபிஸிலேயே இருக்கே, சீக்கிரம் கிளம்புடா..."
எமிலி படபடவெ
...Enjoyed this?
Sign in to clap