
விடியல் எல்லாம் உன் உலா
About
காதல்
மிக அழகான சொல்
அழுத்தமான செயல்
காதல் தவறில்லை
காதலர்கள் தவறாகும் பட்சத்தில்
காயங்கள் கொடுக்குமா
கரை சேர்க்குமா?
அறிந்து கொள்ள அழைக்கிறார்கள் சிவாவும் மதுவும்.
பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்யும் பெண், ஒரே நாளில் காதலித்த மனிதனின் சுயரூபம் தெரிய பலவித இன்னல்களுக்கு ஆளாகிறாள். அந்தத் திருமணத்திலிருந்து எப்படி வெளிவந்து நேர்ந்த இன்னல்களுக்கு விடிவு கண்டுபிடித்து தன் வாழ்வை எப்படி கொண்டு செல்கிறாள் என்பதை சொல்லும் கதை விடியல் எல்லாம் உன் உலா…
விடியல் எல்லாம் உன் உலா
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் 1
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)
மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )
சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!)
புரோகிதர் தனது வெண்கல குரலில் திருமண மந்திரத்தை கூறி அதன் அர்த்தத்தையும் விளக்கி திருமாங்க
...Enjoyed this?
Sign in to clap