Skip to content
கண்ணே உன்னை தேடி : Kanne Unnai Thedi

கண்ணே உன்னை தேடி : Kanne Unnai Thedi

0
2
EBOOK
Completed
Sudha Suresh
Sudha Suresh

About

கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் சிறு வயதில் ஆன நட்பு! சில காரணங்களால் அந்த வயதிலேயே இருவரும் பிரிய நேர்கிறது. இருவரும் வளர வளர அவர்களுக்குள் இருக்கும் அந்த நட்பு காதலாக மலர்கிறது. அந்தப் பெண்ணின் கண்களை மட்டுமே அடையாளமாகக் கொண்டு எப்படி அவளைத் தேடுகிறான் நாயகன்? ஆனால் அந்த அடையாளமே மாறியிருந்தால் என்ன செய்வான்? இடையில் அவனுடைய தொழிலில் எப்படி அவன் வளர்கிறான்? அவனை வீழ்த்த  அவனுடைய எதிரிகள் எப்படி எல்லாம் அவனுக்கு இடைஞ்சல் தருகிறார்கள்? அனைத்திற்கும் விடை தெரிய கதையை இப்போதே வாசியுங்கள்.

அத்தியாயம் -1

அந்தக் காலை ஒன்பது மணி நேரத்து மிதமான வெயிலில் சென்னை மாநகரம் பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது.

அதிலும் மைலாப்பூர் பேருந்து நிலையம் என்றால் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? சிறிதும் பஞ்சமில்லாமல் மக்கள் வெள்ளம் அலை மோதியபடி இருந்தது.

இளைஞர்கள்,யுவதிகள் என்று அலுவலகம் செல்வதற்கு காத்துக் கொண்டிருப்போர் கல்லூரி செல்வோர் மற்றும் பலர் என்று கூட்டம் திரண்டு இருந்தது.

அந்தக் கூட்டத்தில் நம் கதையின் நாயகனும் ஒரு பக்கம் நின்றிருந்தான். அவனுடைய பார்வை முழுவதும் பேருந்து வரும் திசையில் இரு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap