
என் வாழ்வில் நீ வந்தது
About
குடும்ப சூழலுக்காக பணிக்கு செல்லும் பெண்ணை சுற்றி நடக்கும் குடும்ப அரசியலைச் சொல்லும் இயல்பான குடும்ப நாவல். உடன் பிறந்தவனின் சுயநலம் குடும்பத்தை சிதைக்க காத்திருக்க, அமைதியாக இருக்கும் பெண் சூறாவளியாக சுழற்றி அடிக்க அதில் அடிபட்ட நாகமாய் கொடியவன் ஒருவன் விசத்தை கக்க, அவனை துவம்சம் செய்து, துடிதுடிக்கும் நந்தினியை சரி செய்து ஆதித்யா எப்படி அவள் கைத்தலம் பற்றினான் என்பதை காதல், நட்பு, நகைச்சுவை கலந்து எழுதி இருக்கும் கதை தான் இந்த என் வாழ்வில் நீ வந்தது.
என் வாழ்வில் நீ வந்தது
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் 1
மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே
பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில்
கூவும் குயிலே
தாய் மாமன் சீர் சுமந்து வாரான் டீ
அவன் தங்க கொலுசு கொண்டு தாரன் டீ
சீரு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
சீரு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே…
பாடல் வரிகள் காற்றை நிறைத்துக் கொண்டிருக்க, காதை கிழித்தது ஆயிரம் வாலா பட்டாசுகளின் சத்தம். அரை மணி நேரத்திற்கு விடாமல் பட்டாசுகள் வெடிக்க ஸ்தம்பித்தது மண்டபம் இருந்த இடம். பட்டாசு சத்தம் கொஞ்சமாய் குறைய, செ
...Enjoyed this?
Sign in to clap