Skip to content
ஒரு பொழுதேனும்

ஒரு பொழுதேனும்

0
135
EBOOK
Completed#love#family#romantic#prema kameswaran

About

காதலும் நட்பும் சரிவிகிதமாய் கலந்து எழுதப்பட்ட மென்மையான கதை. தடைகளை எல்லாம் உடைத்து மேலே வரத் துடிக்கும் பெண் மீனாட்சி. உறவுகளற்று தனியாய் இருக்கும் கர்ணனோடு கொண்ட நட்பினால் உருவாகும் பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கும் அவள், அவனது காதளுக்காக செல்லும் இடத்தில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பினால் உருவாகும் சூழல்களை எப்படி சமாளித்து நண்பனின் காதலை சேர்த்து வைத்து, தன் வாழ்வையும் சுபிட்சமாக மாற்றிக் கொள்கிறாள் என்பதை, காதலும் மோதலும் நட்பும் நகைச்சுவையும் கலந்து எழுதப்பட்ட நாவல் இந்த ஒரு பொழுதேனும்

ஒரு பொழுதேனும்

பிரேமா காமேஸ்வரன்

பொழுது - 1

நான் நானாக..

விரும்பிய உடை உடுத்தி

விரும்பிய உணவு உண்டு

விரும்பிய இடம் சென்று

என் விருப்பாக

என் வாழ்க்கையின்

ஒரு பொழுதேனும்..

“ஏத்தா பாத்து பத்திரமா போய்ட்டு, போனதும் போன் போட்டு சொல்லு ஆத்தா.. நீ ஊர் போய் சேர்ற வரைக்கும் கெதக்குன்னு கெடக்கும் மனசு..” என்று படபடப்பாக கூறிய தந்தையை எப்பொழுதும் போல முறைத்தாள் மீனாட்சி.

“எத்தன தடக்கி சொல்லுவீங்க இதையே? நா என்ன இன்னைக்கி தான் புதுசா போறேனா? ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா போய்ட்டு வந்துகிட்டு தான இருக்கேன்..” என்றபடி பே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap