
உன்னை நானும் சேரும் நாள்
About
காதலுக்கு புறக்காரணிகள் இடைஞ்சலாக வந்தால் காதலர்கள் போராடி வெல்வார்கள். காலம் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை காதலர்களுக்குள் நிகழ்த்தினால் காதல் தான் என்ன செய்திட முடியும்? காலத்தையும் தாண்டி நிற்கும் காதல்... என்பதைக் காலத்திற்கும் காட்டினால் தானே காதல் தேவனுக்கு மரியாதை?! தேவனும் தேவியும் சேர்ந்து தங்கள் காதலில் விளையாடிய காலத்திற்கு பதில் சொன்னார்களா? காலத்தையும் தாண்டி நின்று நிலைத்து கை சேர்ந்ததா என்பதை சொல்லும் காதலின் புது அத்தியாயமே இந்த உன்னை சேரும் நாள்...
உன்னை நானும் சேரும் நாள்
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் - 1
அக்கினி சிறகே...
பட்டாம்பூச்சியாய் பல வண்ண
கனவுகளோடு பிறந்த
ஒரு சக உயிருக்கு
அக்கினி சிறகை
பரிசளித்தது யாரோ...
எந்த உயிரினத்திலும்
இல்லாத பெரும் சிறப்பு
மானுடத்தில் மட்டுமே...
தனக்கு இணையாய் துணையாய்
படைக்கப்பட்ட ஒரு உயிருக்கு
உன் வாழ்வு எரிமலை சிகரத்தில் தான்...
பொருத்திக்கொள்
அக்கினியால் செய்த சிறகினை...
என பெருமையாய் மார்தட்டி கொள்ளும்
அதிசய ஆச்சர்யம் ஆறு அறிவில் மட்டுமே...
சீதை தன் கற்பினை நிரூபிக்க
ஒரு அக்கினி பரிட்சை
பாஞ்சாலி தன் பவித்ரம் உணர்த்த
ஒரு
...Enjoyed this?
Sign in to clap