Skip to content
அரக்கனின் இதயம் அவளுக்காக!

அரக்கனின் இதயம் அவளுக்காக!

0
0
SERIES•
Ongoing#Village Story#Joint Family#Innocent Heroine#Madhusha Novel#Romance

About

தூத்துக்குடி துறைமுகத்தையே கையில் வைத்திருப்பவன் செந்தூர் ராவண்.. அடிதடி, வெட்டுக்குத்து என செல்லும் அவன் பார்வைக்குள் வந்து விழுகிறாள் மந்தாகினி.. துறுதுறு என சுட்டித்தனமாக சுற்றும் மந்தாகினியை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் ராவண் குடும்பத்தினர்.. ராவண் கையில் தன் பெண் சிக்காமல் இருப்பதற்காக மந்தாகினியை ஒளித்து வைக்கிறார் அவளின் தாய் முத்துச்செல்வி.. இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா?.. மந்தாகினியின் சுட்டித்தனம் தொலையாமல் இருந்ததா?.. இப்படி பல ட்விஸ்ட்கள் இணைந்தது தான் இந்தக் கதை..

அரக்கனின் இதயம் அவளுக்காக!

அத்தியாயம் 1


"யம்மா.. யம்மாஆஆ... அய்யோ அம்மாஆஆ..."

கூரை வீட்டின் உத்திரம் அதிரும் அளவுக்குக் கத்தினாள் மந்தாகினி. 


அவளது கத்தல் கேட்டு, பக்கத்து வீட்டு மெலிந்த பூனை கூடப் பயந்து சுவரேறி குதித்து ஓடியது.


அடுப்படியில் எலுமிச்சை சாதத்தைக் கிளறிக் கொண்டிருந்த முத்துச்செல்வி, வதக்கிய கடலைப்பருப்பையும் பெருங்காய வாசத்தையும் தட்டோடு சேர்த்தபடி, திரும்பிக் கூடப் பார்க்காமல்,


"என்னட்டி... காலங்காத்தால கத்தி ஊரைக் கூட்டுற? சக்கரைத் தண்ணிக்குப் பதிலாக கழுதைப் பாலையா வாய்ல ஊத்து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap