Skip to content
பிழையில் இணைந்த காதல்

பிழையில் இணைந்த காதல்

125
2.9k
SERIES
CompletedIthayamozhi championship 2026#Suspence#Romance#Love
Zeeraf
Zeeraf

About

இது போட்டிக்காக எழுதப்பட்ட புத்தம் புதிய நாவல்

கடந்த காலத்தின் ஒரு பிழையால் வாழ்க்கையை இழந்த நேத்ரா, மகள் ரியாவுடன் தனியாக வாழ்கிறாள். சூழ்நிலை அவளை யுகேந்திரனின் வீட்டிற்கு அழைத்து வருகிறது.

அவளை விட்டு விலக நினைக்கும் நேத்ராவை, யுகேந்திரனின் காதல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது.

ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒரு எதிர்பாராத ரகசியம், அவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கிறது.

அந்த ரகசியம் என்ன? ஒரு எதிர்பாராத பிழை... இரு உயிர்களை எப்படி காதலில் இணைக்கிறது என்பதே “பிழையில் இணைந்த காதல்.”

அந்தக் காலை பொழுது இயற்கையின் மென்மையான அரவணைப்போடு மெல்ல விடிந்தது. இரவின் அமைதியை விலக்கி, பறவைகளின் இனிய கீச்சொலிகள் காற்றோடு கலந்து சுற்றியிருந்த சூழலை உயிர்ப்புடன் நிரப்பி இருக்க, வீட்டின் அருகே நின்றிருந்த பெரிய மரம் முழுவதும் பலவிதமான பறவைகளின் வருகையால் கலகலத்துக் கொண்டிருக்க, அந்த மரத்தையே இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தன இரண்டு சிறிய விழிகள். வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்த அந்த சிறிய விழிகளுக்கு சொந்தக்காரியான ஐந்தே வயதான அந்த சிறுமியோ தன் இரு பிஞ்சுக் கரங்களாலும் பால் நிரம்பிய...
Loading...

Enjoyed this?

Sign in to clap