Skip to content
அவனின் காதல் : Avanin Kaadhal

அவனின் காதல் : Avanin Kaadhal

0
14
EBOOK
Completed
Sudha Suresh
Sudha Suresh

About

இருபது வயது இளம்பெண்கள் அடுத்தடுத்து வரிசையாக கொலையாகின்றனர். கொலைகளை செய்வது யார்? மனிதனா அல்லது மனிதன் அல்லதா வேறு யாராவது ஒருவரா? துப்பறிய வருகின்றனர் இளம் துப்பறிவாளர்கள் விஜய் மற்றும் நிகிதா. உண்மை தெரிய வரும் போது அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. முதல் பாதி துப்பறியும் நாவலாகவும் பின் பாதி ஒரு வித்தியாசமான காதல் கதையாகவும் இருக்கும். வாசித்து கருத்துகளைக் கூறுங்கள்.

அத்தியாயம் - 1 சென்னை மாநகரின் பிரதான நான்கு வழிச்சாலை. அதன் ஒரு புறம் அமைந்திருந்தது அந்த புகழ்பெற்ற பெரிய உணவகம். ஏஞ்சல் ரெஸ்டாரென்ட். பெரிய பெரிய பண முதலைகள் வந்து போகும் ஒரு உயர்தர ஹோட்டல் அது. அதன் எட்டாவது மாடியில் அமைந்திருந்தது அந்த பார்ட்டி ஹால். அந்த விசாலமான அறையின் அலங்காரங்களை பார்த்தாலே அதன் பணக்காரத்தனம் அப்பட்டமாகத் தெரிந்தது. சிறிது நேரம் முன்பு அந்த ஹால், பல பணக்கார வீட்டு இளைஞர்கள் மற்றும் மாடர்ன் உடை உடுத்திய யுவதிகள் என்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது....
Loading...

Enjoyed this?

Sign in to clap