Skip to content
அந்தி மழை சாரல்

அந்தி மழை சாரல்

40
129
EBOOK•
Completed#குடும்பம்#காதல்#குடும்ப அரசியல்#நகைச்சுவை#trendingnovel#அந்திமழைசாரல்#காதல்வாழ்க்கை
Rezvana novel
Rezvana novel

About

அப்பா பேச்சுக்கு மறுபேச்சின்றி நடந்துக் கொள்ளும் நாயகியின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் எதிர்பாராத கல்யாணம். அதை ஏற்க்க மறுக்கும் இரு உள்ளங்களின் போராட்டம். இது முழுக்க முழுக்க குடும்ப அரசியல் காதல் நிறைந்த கதையை முழுதாக வாசித்து மகிழ உங்களை அன்புடன் வரவேற்கிறது "அந்தி மழை சாரல்!".

அந்தி மழை சாரல்

மழை-1

"ஒரு வழியாக நம்ம நெனச்சது போலவே பிசினஸ் இப்போ சக்ஸஸ்ஃபுல்லா போறதுக்கு காரணம் நீங்கதான் தங்கவேல் சார்... நீங்க மட்டும் இல்லன்னா இந்த பிசினஸ் எப்பயோ மண்ணோட மண்ணா போயிருக்கும்" என்று தங்கவேலை சுற்றி இருந்த பிசினஸ் பார்ட்னர் இரண்டு பேர் அவரை பாராட்டி தீர்க்க.

தங்கவேல், "நீங்க இவ்வளோ தூரம் என்னை பத்தி பாராட்டி பேசுற அளவுக்கு இங்க எதுவுமே நடக்கல... நம்ப மூன்று பேரும் ஒண்ணா சேர்ந்து தான் இந்த பிசினஸையே தூக்கி நிலை நாட்டி இருக்கோம். அதனால் இப்போ இந்த பிசினஸ் ஓட வெற்றி நம்ம மூன்று பே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap