
பெண்ணவன் : Pennavan
About
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு பல தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி தான் உயர்வது மட்டுமல்லாது தன்னைச் சார்ந்த அனைவரையும் உயர்த்தி உயர்ந்த இடத்திற்கு வரும் ஒரு திருநங்கையின் கதை தான் இந்த பெண்ணவன் கதை. பல இடங்களில் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து கற்பனையில் உதித்த கதை தான் இது. வாசித்து கருத்துகளைக் கூறுங்கள்.
பெண்ணவன்
அத்தியாயம் - 1
அந்த காலை நேரத்து பனியும் ஜில்லென்ற குளிர்ந்த காற்றும் விடிந்து வெகு நேரம் ஆகவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
"சார், பேப்பர்" சிறுவன் ஒருவன் சைக்கிளில் சென்று வீடு வீடாகச் சென்று கேட்டினுள் பேப்பர் போட்டுக் கொண்டிருந்தான்.
"அம்மா, பால்" வேட்டி கட்டிய நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் வீடுகளுக்குச் சென்று உள்ளிருப்பவர்களை அழைத்து பால் ஊற்றிக் கொண்டிருந்தான்.
பெண்கள் ஆங்காங்கே தங்கள் வீட்டின் முன்பு வாசல் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டு இருந்தனர்.
அந்த தெருவில் நடுவாக இருந்
...Enjoyed this?
Sign in to clap