
மலரே🌺 ஒரு வார்த்தை 🌻 பேசு 🌷
About
மனதில் தேக்கி வைத்து இருக்கும் காதலை சொல்ல முடியாமலும் தனக்கு நிச்சயிக்கப்பட்டவனின் கையால் கிடைக்கப் போகும் மாங்கல்யத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் போராடும் நாயகி நித்திலா. வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்த பிறகும் கூட நாயகியை மறக்க முடியாமல் தவிக்கும் நாயகன் இளவேனில்...
அதிகாலை பொழுதின் காரிருளைத் தன் ஒளிக் கரங்களால் அகற்றி, கதிரவன் பூமியெங்கும் தன் ராஜ்யத்தைத் தொடங்கினான். பகலவனின் விடியலோடு சேர்ந்து, நித்திலாவும் தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிக் கொண்டிருந்தாள்.
கடந்த எட்டு வருடங்களாகப் பசி, தூக்கம், மனஉளைச்சல், வலி என எதையுமே பொருட்படுத்தாமல், தன் குறிக்கோளை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்தவள் அவள். அந்த அயராத உழைப்பிற்கு மகுடம் சூட்டும் விதமாக, இன்றைக்கு வெற்றியோடு சேர்த்து உயரிய விருதும் அவளைத் தேடி வரவிருக்கிறது. எட்டு ஆண்டு க
...Enjoyed this?
Sign in to clap