Skip to content
என்னவன்

என்னவன்

1
0
EBOOK
Completed#Unexpected Marriage#Love After Marriage
Sivapriya
Sivapriya

About

எதிர்பாரா திருமணத்தில் இணையும் ஆதி மற்றும் அனு. ஆதி, மென்பொறியாளன். அனு, படிப்பை பாதியில் நிறுத்தி குடும்பத்திற்காக ஓடும் உதவிப்பெண். மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் இருவருக்குள்ளும். எப்படி அந்த வேறுபாட்டை கலைந்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். யாரென்று தெரியாத ஆதி அப்படி அவளுக்கு அனைத்துமானவன் ஆனான் என படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இது என் முதல் கதை. பலரின் பாராட்டையும் பெற்றது. நீங்களும் படித்துப்பாருங்கள்.

பகுதி - 1 யார் இவன்? நேற்றோ அந்நியன்; இன்றோ என்னுள் பாதி!!! “அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ரேகா. “அம்மா...தயவு செய்து எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று பேசிக் கொள்ளலாம்.” என்றான் ஆதி கெஞ்சும் குரலில். காரணம் அப்பார்ட்மண்ட் வாசிகளின் மொத்த கண்களும் ஆதியின் வீட்டு வாசலை விட்டு நகர மறுத்தன. “உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை தம்பி. உன் கல்யாணத்துக்காக நாங்கள் எவ்வளவு கனவு கண்டு வைத்திருந்தோம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap