
காதல் தந்தேன் தன்மானம் திருடினாய்
0
3
SERIES•
Ongoing
அகநகையின் முன் மஞ்சள் கயிறு ஒன்றை நீட்டினான் கபிலன்.
"தாலியை இதுல கோர்த்துட்டு கொடியை கொடு. பிசினஸூக்கு பணம் தேவைப்படுது. நகையை அடமானம் வைக்கணும்.." எனக் கேட்டான்.
அகநகையின் விழிகள் ஹாலில் அமர்ந்திருந்த தன் மாமியாரை பார்த்தன. மாமியாரின் கழுத்தில் ஒரு இரட்டை வட சங்கிலி, இரண்டு முறுக்கு கொடிகள், ஒரு அட்டிகை, தடியான தாலி கொடி, காதில் மாங்கா டிசைனில் குண்டு தோடு, கை நிறைய கனமான வளையல்கள், ஆறு விரலில் மோதிரங்கள் இருந்தன.
அருகில் அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்த நாத்தனாரின் காலில் தங்க கொலுசு,
...Loading...
Enjoyed this?
Sign in to clap