
தத்தமதம் சம்மதம்?
60
88
SERIES•
CompletedIthayamozhi championship 2026#Ithayamozhi championship 2026#husbandandwife#shruthygayathry#Carrer#love#family#friendship
About
அன்று, மதம் பார்க்காமல் காதல் மணமுடித்த தம்பதி...
இன்று, தங்கள் மகளின் திருமண யாருடைய மதத்தில் என விவாதிப்பதில் தொடங்குகிறது, 'தத்தமதம் சம்மதம்?'
Disclaimer: இக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் கற்பனையே. எந்தவொரு மதம், சமூகத்தையோ அல்லது தனிநபரையோ புண்படுத்தும் நோக்கம் இல்லை. கதாபாத்திரங்களின் கருத்துகள் அவர்களின் சூழ்நிலைகளின் வெளிப்பாடுகளே; அவை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகள் அல்ல. இக்கதை இதற்கு முன்பு எங்கும் வெளியிடப்படாத, எனது சொந்தப் படைப்பாகும்.
கு டும்ப நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்பிலும், வக்கீல் கோட்டுகளின் நடமாட்டத்திலும் நிறைந்திருந்தது. ஹால் எண் 3-ல், உள்ளே இருந்த மனிதர்களின் முகங்களில் பதற்றம் உறைந்திருந்தது. உடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர்களின் முகங்களில் கலவையான உணர்வுகள். அதே சமயம் நீதிபதி புவனேஷ்வரி அவ்வறைக்குள் பிரவேசிக்க, பலத்த மரியாதை எழுந்தது. அவர் தனது அரியாசனத்தில் அமர்ந்ததும், மீண்டுமாக அனைவரும் அமர்ந்தனர். "வரிசை எண் 14. வழக்கு எண்: 2026/F-405. விஷ்வநாதன் ரீமா!", என நீதிமன்ற எழுத்தர் கோப்பினை பார்த்தபடி உரத்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap