
நிலவின் நிழலாய் நீ
About
"ஆகாஷ் ஒரு புகழ்பெற்ற ஓவியன். வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது.
அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...
நிலவின் நிழலாய் நீ
சென்னையில், அந்தப் புறநகர் பகுதி அக்டோபர் மாத மழையின் பிடியில் சிக்கியிருந்தது…
ஒரு காலத்தில் வண்ணங்களின் சரணாலயமாக, கலைகளின் சொர்க்கமாகத் திகழ்ந்தது அந்தப் பெரிய பங்களா வீடு. வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் ஆகாஷின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் உயிரோட்டத்துடன் பேசிக் கொண்டிருக்கும்; தூரிகைகளின் முனையில் அவன் தீட்டிய ஒவ்வொரு நிறமும் ஒரு கதையைச் சொல்லும். ஆனால், இன்று அந்த வீடு ஒரு மௌனக் கல்லறையாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது பார்ப்பவருக்கு…
தடிமனான திரைகளால் அறையின் ஜன்னல்கள் மூ
...Enjoyed this?
Sign in to clap