
இனி எல்லாம் நீயாக
About
கல்லூரி காதல் கதை. காதலுக்கே உண்டான பிரிவு இழப்பு சோகம் என தொடங்கும் நந்தனின் வாழ்வில் அனிதா வந்த பின் காதலுக்கும் நட்பிற்கும் வித்தியாசம் அறிந்து கடந்த கால கசப்பான அனுபவங்களை மன்னித்து மறந்து சுபமாக சுகமாக முடியும் ஒரு பீல் குட் கதை. படியுங்கள். விமர்சியுங்கள்.
இனி எல்லாம் நீயாக ஒன்று
டைடல் பார்க் சிக்னலில் மாலை நான்கு மணி இருபது நிமிடத்தில் அத்தனை ஒரு போக்குவரத்து நெரிசல். சர்தார் படேல் சாலையில் ஏதோ ஒரு மாநில கட்சியின் சார்பாக மாபெரும் பேரணி போய் அப்போது தான் முடிந்திருந்தது. அங்கேயிருந்து வலது பக்கம் மத்திய கைலாஷ் சந்திப்பில் திரும்பி பழைய மகாபலிபுரம் சாலையில் தொடங்கி டைடல் பார்க் வரை வண்டிகள் வீய் வீய் என்று ஒலி எழுப்பி தங்கள் அவசரத்தையும் ஆத்திரத்தையும் ஒரு சேர காட்டி பரபரத்து கொண்டிருந்தன. அதே போல எதிர் சாரியிலும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத அந்த
...Enjoyed this?
Sign in to clap