Skip to content
இதயம் எனும் போர் முனையில்.

இதயம் எனும் போர் முனையில்.

7
7
SERIES
Ongoing
Yaathavamithra
Yaathavamithra

About

"இதயம் எனும் போர் முனையில்".... ஒவ்வொரு இதயமும் ஒரு போர்க்களம் தானே. எத்தனையோ உணர்வுகளின் போராட்டங்கள் அங்கே. காதல், நட்பு, அன்பு, கோபம், வலி, துரோகம் என்று பல விதமான உணர்வுகளும் போர், பகை, வெற்றி, தோல்வி , வீரம் என்ற அம்சங்களுடன் இணைந்த ஒரு அழகிய கதை தான் இது. வரலாற்று நாவல் என்று கூறிவிட முடியாது. முற்று முழுதாக கற்பனையில் உருவான இரு அரச வம்சங்கள் பற்றிய கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். நம் கதை மாந்தர்கள் உங்கள் உள்ளங்களை கொள்ளையிடும் பேறு பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கதிரவனின் செங்கிரணங்கள் மேகங்களைத் தங்கத் தகடுகளாகப் பிரகாசிக்கச் செய்துகொண்டிருந்தன. இரை தேடச் சென்ற பறவைகள் தத்தமது கூடுகளைத் தஞ்சமடைந்து கொண்டிருந்த அழகிய பின் மாலைப் பொழுது அது. " டக் டக், டக் டக்" என்று தொலைவில் ஒரு சப்தம் சுற்றிலும் நிலவியிருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கேட்டது. குதிரைக் குழம்படியின் சத்தம் போல் தெரிகிறதல்லவா? ஆம் குதிரை தான் வருகிறது. மாலைக் கதிரவனின் மெல்லிய வெளிச்சத்தில் தூரத்தில் ஒரு குதிரை வருவது தெரிகிறது. அழகிய கரு நிற உயர்ந்த ரகக் குதிரை . அதன் மேல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap